எனது அமிர்த தமிழ் படைப்புகள்
Saturday, 31 August 2019
எலியா பேசும் ...எமது பேச்சு.....
முச்சுண்டெலிகளும் முதிய தாய் எலியும் ஒற்றைச் சாய் குச்சியில் ஒய்யாரம் காட்டி நிற்க...
முன்னது பின்தங்கி தாய்க்குதவ...நேர்ப்பின்னது பிடிதவறி இருகால் தொங்க....
அதன் பின்னது வால் கொண்டு குச்சி பின்ன...
என்ன பயணமிது எங்கே செல்ல...
மூன்று பிறப்புகளும்
எனைத்துரத்த என்ன சொல்ல....
பூனைக்குப் பயந்துதான் இங்கே வந்தோம்...
புலி வாழும் பகுதியாம் அது மறந்தோம்...
சாலை கடினமானாலும்
இச் சோலை தந்தது அழகை...
பற்றிட இரு கால் கையாகும் ...
பாதை மெல்லிய நூலாகும்...
ஏற்றம் சிறிய நூலதினால் ....
ஏறிய பட்டம் கண்டிலையோ...
காற்றெம் பக்கம் வீசுவதால் கவிதை வந்தது தன்னாலே..
அறிவியல் இளைஞர் கணேசனின் அற்புதக் காட்சி இதுவென்றால்.. அறிவியல் இளைஞன் இராமசாமி சொற்பதம் கொண்டு அணி செய்வான்....
காட்சி அருமை அய்யா...வாழ்த்தும் அன்பும் வருகிறது ஏற்பீர்....
முயற்சியே மூலதனம்...
முடிவு வெற்றிதராவிட்டாலும் முயற்சி வெற்றி தந்தே தீரும்..
அதுவே சரித்திரம் பகரும் உண்மை....
ஏற்றம கடினமானாலும் மாற்றம் வேண்டின் பனியிலும் மழையிலும் மலையிலும் பணி செய்ய அஞ்சக்கூடாது...பொன்னிற மேகமும் ஞாயிறின் கதிர்களும் பாதங்கள் தரைபாவா விட்டாலும் நம்பிக்கை என்னும் இருகைகள் இறுகப்பற்றி இலக்கடைய உதவிடும் ...விரல்கள் பத்துமே மூலதனம் ...விடியல் அருகில்தான் விருந்துதரும்....
வண்ணப்பறவை...
ஒற்றைக்குச்சியில் உள்ளாசம்...
அலகு விரிக்க அழகு தரும்...
விழிக்கும் மேலே புருவமதா..
வியந்து பார்க்கும்
ஆனந்தம்...
கருப்பா சிவப்பா உன்
நிறமே....
சொல்றா கருப்பா
நீ உடனே..
வாலில் இறகு விரிப்பென்ன...
உறவு வரவா இனி என்ன...
சாம்பலும் வெள்ளையும்
கருப்பும் சிவப்பும்
உன் தன்மையை உரைத்திடும் அழகென்ன....
😛😛....
வனம் நம் சீதனம்...
வனங்காப்போம்...
வன உயிரிகள் காக்க.....
உயிர் பேணும் பூங்கா வனம்....
அறிவினில் வேறுபட்ட அறிவுள்ள உயிர் வாழுமிடம்...
சூழலில் உச்சம் சென்று கண்டால் சொர்க்கம்...
எழுதிடச் சொற்கள் இல்லை உணர்ந்திடத்தான் தெரியும்...
அனுபவம் கடவளைப்போல் அனுபவித்தால் விளங்கும்...
விலங்கங்கு விலங்கல்ல விலங்கு நீயேதான் ...
விளங்கு மனிதா விலங்கு விட்டு விலகி வா...
உணவொன்றே ஒற்றைத் தேவை...
உம்போல் தலைமுறை வாழப் பொருள் சேர்க்கும் எண்ணம் இல்லை...
நீ வாழ வாழும் நிலை மட்டும் அங்குண்டு...
உம்போல் அடுத்துக்கெடுத்திட அங்கேதும் வழியில்லை...
விலங்கிலும் வாழ வலிவே துணை தரும்..
சோம்பித் திரிந்தால் உணவின்றி அது மடியும்...
வனம் விரும்பினால் காட்டிடும் வானம்...
செறிவினால் சில இடத்தில் தோன்றாது வானம்...
நிலமகள் தரிசனம் உண்மையில் பசுமை....
நிலைபெறச் செய்வது நீ காணும் வனமே...
அற்பமாய் வேட்டை நீ ஆடிட நினைத்தால்...
அழிவது நீயே ஆய்ந்தெடு முடிவை...
அறிவினில் ஆறு படைத்திட்ட மனிதா...
ஆறு நகர்ந்திட வழி மறிப்பதேனோ...
அறிவால் புதுமைகள் படைப்பதாய் எண்ணி....
கழிவதை நதிதனில் சங்கமம் செய்தாய்...
போகும் வழியதில் வளத்திற்குப் பதிலாய்....
தோன்றவே நோயதும் ஏதாகும் அதுவே...
வாழ்ந்திட அறிவு கொள் வாழ்கின்ற மனிதா...
மரம் எனும் வரம் சேர்ந்த வனம் காக்க நீயும்...
முடிவெடு செய்திடு தலைமுறை வாழ...
ஒப்பிலா உயிர்வளி உயிர்வழி நீள...
கரி எனும் நீ விடும் வெளிமூச்சு நீங்க...
மறுசுழற்சி செலவின்றி இயற்கையே பேண...
நீ வருமுன்னர் வரங்களாய் மரங்களே தோன்ற...
மலையில் காட்டில் கடலில் எங்கும் ......
தாவரம் தரும் வரம் உயிர் உணவாகும்....
Friday, 30 August 2019
ஆதவனின் அருட்கொடை...
வைகறை துயில் எழ வாசலில் ஆதவன்...
காடுகறை பசுமை பெற வந்திடும் ஓர்வரம்...
களித்திடவே வெம்மை காட்டி நீ வருவாய்...
மெல்லச் சூடேற்றி மேலெழும்பும் வளியால்... வெற்றிடம் உருவாக்கி வேற்றிட வளியை விரைந்திடவே செய்திடுவாய்...
அள்ளித் தெளிக்கும் மழை
அளவிடா பெருஞ் செல்வம்..
வையத் துயிர் காக்கும்
வரப்பிரசாதமது...
சேர்ப்பார் சேர்ப்பர் மதியிழந்து சேர்க்காதோர் வீண்செய்வார்...
வருகையில் சேர்க்காது வருண தவம் செய்து வாய்த்த பயன் ஏதுமுண்டோ...
நிலத்தடிநீர் வீண் இல்லை...தோண்டத் தருவாள் மீள அதை...அகண்ட வங்கியில் நீர் சேர வழி அமைத்து... நீர் குறைவில்லையென்று நீர் உம் வாயால் இயம்பும் வரை அவலமே தொடரும்...
நினைத்திடு செய்திடு அமைத்திடு மழை நீர் சேகரிக்க உகந்த வழியதை...
தலைமுறை காக்க இயற்கை தரும் சீதனம் மழை.. அதிகம் தந்தால் ஆபத்து.
தேவைக்கு நல்முத்து...இல்லையென்றால் உலகப்போர் என்ற அக்கப்போர்...
தேவையா விழித்தெழு விழித்திருத்தல் வாழ்க்கையில்லை... விழிப்போடிருத்தலே வாழ்க்கை..
ஆதவன் வைகறையில் உன் துயர் விலக்கவே தோன்றியுள்ளான்.....
கவிஞர் பாலாஜிக்கு வாழ்துகள்
மாமதுரையில் தமிழால் மாமது வழங்கிய ...
வடக்கு பாரதி முடக்கு சொற்களால் மடக்கி...
முத்தமிழைக் குழைத்து அணி செய்து...
கதையில் விதை சேர்த்து கவிதை அரங்கேற்றி...
உள்ளம் களிக்க உகந்தே மொழிந்திட..
கேட்போர் விளங்கிட வியந்திட உரைத்திடும் ...
கள்வன் அவனே உள்ளம் கவர்ந்திடும் கள்வன் அவனே...
மொழியால் உயர்ந்திடும் இளவல் மொழிவதால் மொழியும் உயர்கிறது...
கற்றவர் நிறை அவையில் கலங்கிடாது தமிழுரைக்க...
வல்லமை தந்த தாயே வளம் நிலை கொண்ட நீயே...
மனத்திருந்தியக்குகின்றாய் மனங்கொள் கருத்தினாலே...
கருத்ததை கருத்தாய்த் தரும் கருத்துள்ள எந்தன் தம்பி...
கருதியிதைச் செய்யவில்லை...
கலைமகள் உள்ளிருந்து களிநடம் புரிவதாலே...
அள்ளித் தெளித்திடும் சொல்லனைத்தும்
விதைகளாய்ப் பதியமாக...
முன்னொட்டாய்க் "க" வந்தொட்டி கவிதையாய் ஆனதிங்கே...
விசித்திரம் ஏதுமில்லை
படைத்திடும் சரித்திரம் பகரும் இனி தமிழேடு வளரும் நாளில்...
வாழ்த்துதல் மூத்தோன் வேலை...
வாழ்த்திட வந்த வேளை...
தமிழ் மகள் கரம் பிடித்து...
சொடுக்கிய சொற்களாலே...
வந்தது இந்தச் சொற்கள்...
வாழ்க எம் இளவல் மேலும்...வளர்க தமிழ் போல் என்றும்...
அண்ணனும் முகநூல் பார்த்து ...
அரை குறை தமிழுரைப்பான்...
பூனையும் புலியைப் பார்த்து புதுக்கோடு போட்டதைப்போல்...
அண்ணன் உன் தமிழைப் பார்த்து அரைகுறையாய் வரைந்து வைத்தேன்..
ஏற்றிடு நன்றிதென்றால்...
இறக்கி வை உளம் கனத்தால்....
வாழ்க.... வளர்க...
அன்புடன் மா.இராமசாமி...
திருப்பெருந்துறை...
Wednesday, 28 August 2019
எம் பள்ளி மதி ஆசிரியருக்கு எனது வாழ்த்துரைகள்
மனதார வாழ்த்துகிறேன் அன்புச் சகோதரனை...
புதுக்கோட்டை புரிந்து கொள்ளா தகவல்களை
உடன் புரிந்து ஓடிச் செய்ததோடு மட்டுமல்லாது...
மற்றவர்க்கும் முன்வந்து தானே விளக்கம் தந்தது...
யார் எப்படிப் போனா நமக்கென்ன என நினையாது...
தெரிந்ததை எடுத்து உடனுரைத்து..
கூசாது பணி செய்யும் உம்பணி சிறக்க ...
உரிமையோடு உள்ளன்பால் வாழ்த்துகிறேன்...
ஏற்பதும் மறுப்பதும் உன் பெருந்தன்மை...
வாழ்த்துவது. அண்ணனின். கடமை...
வாழ்க வளர்க....
புதுக்கோட்டை புரிந்து கொள்ளா தகவல்களை
உடன் புரிந்து ஓடிச் செய்ததோடு மட்டுமல்லாது...
மற்றவர்க்கும் முன்வந்து தானே விளக்கம் தந்தது...
யார் எப்படிப் போனா நமக்கென்ன என நினையாது...
தெரிந்ததை எடுத்து உடனுரைத்து..
கூசாது பணி செய்யும் உம்பணி சிறக்க ...
உரிமையோடு உள்ளன்பால் வாழ்த்துகிறேன்...
ஏற்பதும் மறுப்பதும் உன் பெருந்தன்மை...
வாழ்த்துவது. அண்ணனின். கடமை...
வாழ்க வளர்க....
Subscribe to:
Posts (Atom)