Saturday, 31 August 2019
வனம் நம் சீதனம்...
வனங்காப்போம்...
வன உயிரிகள் காக்க.....
உயிர் பேணும் பூங்கா வனம்....
அறிவினில் வேறுபட்ட அறிவுள்ள உயிர் வாழுமிடம்...
சூழலில் உச்சம் சென்று கண்டால் சொர்க்கம்...
எழுதிடச் சொற்கள் இல்லை உணர்ந்திடத்தான் தெரியும்...
அனுபவம் கடவளைப்போல் அனுபவித்தால் விளங்கும்...
விலங்கங்கு விலங்கல்ல விலங்கு நீயேதான் ...
விளங்கு மனிதா விலங்கு விட்டு விலகி வா...
உணவொன்றே ஒற்றைத் தேவை...
உம்போல் தலைமுறை வாழப் பொருள் சேர்க்கும் எண்ணம் இல்லை...
நீ வாழ வாழும் நிலை மட்டும் அங்குண்டு...
உம்போல் அடுத்துக்கெடுத்திட அங்கேதும் வழியில்லை...
விலங்கிலும் வாழ வலிவே துணை தரும்..
சோம்பித் திரிந்தால் உணவின்றி அது மடியும்...
வனம் விரும்பினால் காட்டிடும் வானம்...
செறிவினால் சில இடத்தில் தோன்றாது வானம்...
நிலமகள் தரிசனம் உண்மையில் பசுமை....
நிலைபெறச் செய்வது நீ காணும் வனமே...
அற்பமாய் வேட்டை நீ ஆடிட நினைத்தால்...
அழிவது நீயே ஆய்ந்தெடு முடிவை...
அறிவினில் ஆறு படைத்திட்ட மனிதா...
ஆறு நகர்ந்திட வழி மறிப்பதேனோ...
அறிவால் புதுமைகள் படைப்பதாய் எண்ணி....
கழிவதை நதிதனில் சங்கமம் செய்தாய்...
போகும் வழியதில் வளத்திற்குப் பதிலாய்....
தோன்றவே நோயதும் ஏதாகும் அதுவே...
வாழ்ந்திட அறிவு கொள் வாழ்கின்ற மனிதா...
மரம் எனும் வரம் சேர்ந்த வனம் காக்க நீயும்...
முடிவெடு செய்திடு தலைமுறை வாழ...
ஒப்பிலா உயிர்வளி உயிர்வழி நீள...
கரி எனும் நீ விடும் வெளிமூச்சு நீங்க...
மறுசுழற்சி செலவின்றி இயற்கையே பேண...
நீ வருமுன்னர் வரங்களாய் மரங்களே தோன்ற...
மலையில் காட்டில் கடலில் எங்கும் ......
தாவரம் தரும் வரம் உயிர் உணவாகும்....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment