Friday, 30 August 2019

கவிஞர் பாலாஜிக்கு வாழ்துகள்

மாமதுரையில் தமிழால் மாமது வழங்கிய ...

வடக்கு பாரதி முடக்கு சொற்களால் மடக்கி...

முத்தமிழைக் குழைத்து அணி செய்து...

கதையில் விதை சேர்த்து  கவிதை அரங்கேற்றி...

உள்ளம் களிக்க உகந்தே மொழிந்திட..

கேட்போர் விளங்கிட வியந்திட உரைத்திடும் ...

கள்வன்   அவனே உள்ளம் கவர்ந்திடும் கள்வன் அவனே...

மொழியால் உயர்ந்திடும் இளவல் மொழிவதால் மொழியும் உயர்கிறது...

கற்றவர் நிறை அவையில் கலங்கிடாது தமிழுரைக்க...

வல்லமை தந்த தாயே வளம் நிலை கொண்ட நீயே...

மனத்திருந்தியக்குகின்றாய்  மனங்கொள் கருத்தினாலே...

கருத்ததை கருத்தாய்த் தரும் கருத்துள்ள எந்தன்  தம்பி...

கருதியிதைச் செய்யவில்லை...

கலைமகள் உள்ளிருந்து களிநடம் புரிவதாலே...

அள்ளித் தெளித்திடும் சொல்லனைத்தும்

விதைகளாய்ப் பதியமாக...

முன்னொட்டாய்க்  "க" வந்தொட்டி கவிதையாய் ஆனதிங்கே...

விசித்திரம் ஏதுமில்லை
படைத்திடும் சரித்திரம் பகரும் இனி தமிழேடு வளரும் நாளில்...

வாழ்த்துதல் மூத்தோன் வேலை...

வாழ்த்திட வந்த வேளை...

தமிழ் மகள் கரம் பிடித்து...
சொடுக்கிய சொற்களாலே...

வந்தது இந்தச் சொற்கள்...

வாழ்க எம் இளவல் மேலும்...வளர்க தமிழ் போல் என்றும்...

அண்ணனும் முகநூல் பார்த்து ...
அரை குறை தமிழுரைப்பான்...

பூனையும் புலியைப் பார்த்து புதுக்கோடு போட்டதைப்போல்...

அண்ணன் உன் தமிழைப் பார்த்து அரைகுறையாய் வரைந்து வைத்தேன்..

ஏற்றிடு  நன்றிதென்றால்...

இறக்கி வை உளம் கனத்தால்....

வாழ்க.... வளர்க...

அன்புடன் மா.இராமசாமி...
 திருப்பெருந்துறை...

No comments:

Post a Comment