Saturday, 31 August 2019

எலியா பேசும் ...எமது பேச்சு.....

முச்சுண்டெலிகளும் முதிய தாய் எலியும் ஒற்றைச் சாய் குச்சியில் ஒய்யாரம் காட்டி நிற்க... முன்னது பின்தங்கி தாய்க்குதவ...நேர்ப்பின்னது பிடிதவறி இருகால் தொங்க.... அதன் பின்னது வால் கொண்டு குச்சி பின்ன... என்ன பயணமிது எங்கே செல்ல... மூன்று பிறப்புகளும் எனைத்துரத்த என்ன சொல்ல.... பூனைக்குப் பயந்துதான் இங்கே வந்தோம்... புலி வாழும் பகுதியாம் அது மறந்தோம்... சாலை கடினமானாலும் இச் சோலை தந்தது அழகை... பற்றிட இரு கால் கையாகும் ... பாதை மெல்லிய நூலாகும்... ஏற்றம் சிறிய நூலதினால் .... ஏறிய பட்டம் கண்டிலையோ... காற்றெம் பக்கம் வீசுவதால் கவிதை வந்தது தன்னாலே.. அறிவியல் இளைஞர் கணேசனின் அற்புதக் காட்சி இதுவென்றால்.. அறிவியல் இளைஞன் இராமசாமி சொற்பதம் கொண்டு அணி செய்வான்.... காட்சி அருமை அய்யா...வாழ்த்தும் அன்பும் வருகிறது ஏற்பீர்....

1 comment: