Friday, 30 August 2019

ஆதவனின் அருட்கொடை...

வைகறை துயில் எழ வாசலில் ஆதவன்... காடுகறை பசுமை பெற வந்திடும் ஓர்வரம்... களித்திடவே வெம்மை காட்டி நீ வருவாய்... மெல்லச் சூடேற்றி மேலெழும்பும் வளியால்... வெற்றிடம் உருவாக்கி வேற்றிட வளியை விரைந்திடவே செய்திடுவாய்... அள்ளித் தெளிக்கும் மழை அளவிடா பெருஞ் செல்வம்.. வையத் துயிர் காக்கும் வரப்பிரசாதமது... சேர்ப்பார் சேர்ப்பர் மதியிழந்து சேர்க்காதோர் வீண்செய்வார்... வருகையில் சேர்க்காது வருண தவம் செய்து வாய்த்த பயன் ஏதுமுண்டோ... நிலத்தடிநீர் வீண் இல்லை...தோண்டத் தருவாள் மீள அதை...அகண்ட வங்கியில் நீர் சேர வழி அமைத்து... நீர் குறைவில்லையென்று நீர் உம் வாயால் இயம்பும் வரை அவலமே தொடரும்... நினைத்திடு செய்திடு அமைத்திடு மழை நீர் சேகரிக்க உகந்த வழியதை... தலைமுறை காக்க இயற்கை தரும் சீதனம் மழை.. அதிகம் தந்தால் ஆபத்து. தேவைக்கு நல்முத்து...இல்லையென்றால் உலகப்போர் என்ற அக்கப்போர்... தேவையா விழித்தெழு விழித்திருத்தல் வாழ்க்கையில்லை... விழிப்போடிருத்தலே வாழ்க்கை.. ஆதவன் வைகறையில் உன் துயர் விலக்கவே தோன்றியுள்ளான்.....

No comments:

Post a Comment